இதுவரை இல்லாத விதமாக சூப்பர் சிங்கர் சிவாங்கி தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சிவாங்கி.

சூப்பர் சிங்கரில் கிடைத்த புகழை விட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இவர் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசன்களிலும் இவர் கோமாளியாக கலந்து கொண்டார்.
சூப்பர் சிங்கர் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் சிவாங்கி.அப்போது இவர் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது .ஏனென்றால் இவரின் தாயார் பிரபல பின்னணி பாடகி. சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலை இவரது தாய் பின்னி தான் பாடியிருந்தார்.
பின்னர் இவர் மீதும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இவர் பாடும் போது குரல் ஒரு மாதிரியாகவும், பேசும்போது குரல் ஒரு மாதிரியாகவும் இருப்பதால் இவர் நடிக்கிறார் என்று பல குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் சிவாங்கி இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பின்னர், அவர் மீதான பார்வை மாறியது. அந்த நிகழ்ச்சியிலேயே தனது குரலை பற்றி பலரும் கிண்டல் செய்து பேசியது குறித்து கண்கலங்கி பேசியிருந்தார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அஸ்வினுடன் இவர் சேர்ந்து அடித்த லூட்டி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக சிவாங்கிக்கு டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக தனது முதல் திரை உலக வாய்ப்பை பெற்றார் சிவாங்கி. மேலும் வடிவேலுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் பாடல்களையும் பாடி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் சிவாங்கி, அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட அசத்தி இருக்கிறார். அந்த படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.