தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் இரண்டு நாட்களாக எழ கூட முடியவில்லை என்று சிவாங்கி தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் சிங்கர் என்று நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் சிவாங்கி கிருஷ்ணமூர்த்தி. இவரது தாய் பின்னி பிரபல பின்னணி பாடகி ஆவார். சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலை பாடியவர் தான் பின்னி. அம்மா போலவே இசைத்துறையில் சாதிக்க நினைத்த சிவாங்கிக்கும் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சிவாங்கி மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. அவர் பேசும்பொழுது ஒரு குரலாகவும், பாடும் பொழுது வேறு ஒரு குரலாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் சிவாங்கியை கலாய்த்து வந்தனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சிவாங்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வந்தார்.

ஆனால் சிவாங்கியால் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்ல முடியவில்லை. அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இருந்தபோதிலும் மனம் தளராத சிவாங்கி அடுத்ததாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சிவாங்கிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் சிவாங்கி, தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பல படங்களில் பின்னணி பாடியும் வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும், வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியும் இருக்கிறார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றுள்ள சிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
தற்போது சிவாங்கி குக் வித் கோமாளி சீசன் 4ல் குக்காக கலக்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஒரு பதிவு ஒன்றை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், ” எல்லோருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்! கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலாலும் சளியாலும் எழுந்திருக்க கூட முடியவில்லை. ஆனால் இன்று நான் பெறும் அன்பு உண்மையிலேயே அபாரமானது . நீங்கள் அனைவரும் என்னை மீண்டும் எழுந்து வைத்தீர்கள்! உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமில்லை..! நன்றி என்று பதிவிட்டுள்ளார். காய்ச்சல் மிக அதிகமாக பரவி வருகிறது, அனைவரையும் பாதுகாப்பாக இருங்கள் மக்களே..! டாட்டா என்றும் கூறியுள்ளார். சிவாங்கி விரைந்து குணமாகி வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்களது பிராத்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.