Categories: சினிமா

மாலத்தீவில் ஆளே மாறிய Sivaangi..! கதாநாயகிகளை மிஞ்சும் போஸ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

பிரபல பாடகி பின்னி கிருஷ்ணகுமார் மகள் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமாகி அசத்தி இருந்தார். தனது குரலால் ரசிகர்களை கவர்ந்து இறுதிக்கட்டம் வரை பயணித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆக கலந்துகொண்டு இருந்தார்.

மாலத்தீவில் ஆளே மாறிய Sivaangi..! கதாநாயகிகளை மிஞ்சும் போஸ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! 1

இந்த நிகழ்ச்சி இவரை உச்சத்தில் கொண்டு அமர வைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட இவர் தொடர்ந்து கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார் சிவாங்கி. கடந்த சீசனில் இவர் போட்டியாளராக களம் இறங்கி சமைத்து அசத்தி இருந்தார்.

தற்போது இவர் விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சிவாங்கி லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்