Categories: சினிமா

அடுத்து அடுத்து படங்களில் கமிட் ஆன சிவா..SK22 பற்றி வெளியான சூப்பர் அறிவிப்பு | Sivakarthikeyan

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப் படமான SK20 வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார் சிவா. டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை சிவாவுக்கு கொடுத்துள்ளன. வசூலில் 100 கோடியை தாண்டியுள்ளதால் SK20 படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாகியுள்ளது.

அடுத்து அடுத்து படங்களில் கமிட் ஆன சிவா..SK22 பற்றி வெளியான சூப்பர் அறிவிப்பு | Sivakarthikeyan 1

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் சிவா. குறுகிய்கால இடைவெளியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து 100 கோடி வசூலை அள்ளியிருக்கிறார். ஆங்கிலத்தில் சொல்வது போல நெக்ஸ்ட் டோர் கை அதாவது பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் லுக்கும், தலைக்கணம் இல்லாத தன்மையும் அவரை மென்மேலும் உயர்த்திக் கொண்டே உள்ளது. படங்களில் நடிப்பது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்ல் என்ற நிறுவனத்தை உருவாக்கி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிவா.

இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் SK20 படங்கள் விரைவில் வெளியாக ரெடியாக உள்ளன. ஆகஸ்ட் 30ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள அயலான் படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக SK 21வது படத்தை கமலஹாசின் ராஜ்கமல் இண்டர்நேஷனலுடன் இணைந்து நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே SK22 படத்தின் ஷூட்டிங்கும் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மண்டோலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனத் சார்பில் கல்பாத்தி அகோரம் சிவகார்த்திகேயனின் 22வது படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் சமந்தாவுடன் நடிக்க பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்