யானை ட்ரைலர் பற்றி ட்வீட் போட்டு பெருந்தன்மை காட்டிய சிவா..பதில் அளித்த அருண்விஜய்

வெளியிட்டது

நடிகர் அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல் இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. கடுமையான உழைப்பு மற்றும் திறமையால் முன்னுக்கு வந்தவர் சிவகார்த்திகயேன். விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆரம்பித்து பின்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் ஆனார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 1ல் டைட்டில் வின்னரும் கூட. நடனம், மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களில் பயணிக்கிறார் சிவா. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவா சீமராஜா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

யானை ட்ரைலர் பற்றி ட்வீட் போட்டு பெருந்தன்மை காட்டிய சிவா..பதில் அளித்த அருண்விஜய் 1
அப்போது அருண் விஜய் போட்ட ட்வீட் ஒன்று வைரலானது. அதில் நீயெல்லாம் மாஸ் ஹீரோவா? யார் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு, தமிழ் மக்களுக்கு தெரியும் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். இது மறைமுகமாக சிவாவை தாக்கி எழுதப்பட்டது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜயை திட்டி தீர்த்தனர். ஆனால் அருண் விஜய் என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது, பழைய பதிவுகள் நான் போடவில்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் மோதல் இருப்பதாகவே ரசிகர்கள் கருதினர். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட எதிரில் வந்த அருண் விஜயை கண்டுகொள்ளதது போல் சிவா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிவகார்த்திகேயன் ஒரு நெகிழ்ச்சிப் பதிவை போட்டுள்ளார். அதில் நேற்று வெளியான யானை படத்தின் “ட்ரைலர் மிக அருமையாக இருந்தது, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா” என்று தனது பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இதை பார்த்த அருண் விஜய் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். முன்னதாக அருண் விஜய் மகன் பிறந்த நாளைக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்தி இருந்தார். சிவகார்த்திகேயனின் இந்த செயலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சக நடிகரின் படத்தின் ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்தி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இருவரும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்