Categories: அரசியல்

எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ்தான் தெரியும் “ஹிந்தியை புறக்கணித்த சிவகார்த்திகேயன்”

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.இவர்களுடன் எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,மனோ பாலா ,ராதாரவி,ஷிவாங்கி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.

எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ்தான் தெரியும் "ஹிந்தியை புறக்கணித்த சிவகார்த்திகேயன்" 1

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தி திணிப்பு குறித்து எல்லா நடிகர்களும் பேசி வருகின்றனர்,நீங்கள் அதுகுறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்ப,அதற்கு பதில் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்,எனக்கு தமிழ் தான் தெரியும்,தமிழ் தான் பேசிட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கருத்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.உண்மையில் சிவா அண்ணன் தமிழன்,தமிழை மதிக்க கூடியவர் என தமிழ் சினிமா ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர்

 

ஸ்ரீ ஹரி

From the political arenas of Chennai to the serene temples of Thanjavur, my reporting is shaped by the sights, sounds, and stories that define the soul of Tamil Nadu.

வெளியிட்டது

புதிய செய்திகள்