Categories: சினிமா

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.!

வெளியிட்டது

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா கிரிக்கெட் மேட்சை பார்த்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. ஆராதனா யாரும் எதிர்பாராத விதமாக பெரிய பெண்ணாக வளர்ந்து இருக்கிறார். இதுவும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு போவார்கள் சிவகார்த்திகேயன். இவருடன் ரஜினி முருகன் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகையாக இருந்த மேனகா சுரேஷின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக தனது திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தவர் இது என்ன மாயம் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.! 1
முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்த போதிலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது ரஜினி முருகன் தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததன் மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, சண்டக்கோழி 2, சர்க்கார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். தற்போது கைவசம் போலோ சங்கர், மாமன்னன், சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்த வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் இணைந்து அவர் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் பார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கி இருக்கிறது.

இதில் சிஎஸ்கே அணி விளையாடுவதை பார்ப்பதற்காக சிவகார்த்திகேயன் நடிகர் சதீஷ், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் சென்றிருந்தனர். அப்போது கீர்த்தி சுரேஷ் உடன் அமர்ந்து ஆராதனா கிரிக்கெட்டை விளையாட்டை பார்த்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. கையில் விசில் ஒன்றை வைத்துக் கொண்டும் ஊதிக் கொண்டும் ஆராதனா போட்டியாளர்களை குஷிப் படுத்திக் கொண்டிருக்கிறார் .கண்ணாடி போட்டுக்கொண்டு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஆராதனா நன்றாக வளர்ந்திருக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, நடிகை நித்யா ஆகிய பலரும் சென்னையில் நடந்த போட்டியை காண்பதற்காக சென்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோலிவுட்டே இங்கதான் இருக்கு போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்