குழந்தைகள் மனதில் “நிறவெறி” நஞ்சை விதைத்தாரா சிவா? சிவா பேச்சால் எழுந்த கடும் சர்ச்சை.!

வெளியிட்டது

தமிழின் முன்னணி நாயகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு சிவகார்த்திகேயனும் ஒரு காரணமாக இருந்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் ஒரு சீசனில் பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தார் சிவா. பின்னர் அது இது எது என்ற நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு விஜய் டிவி ஒரு பெரிய திருப்புமுனை அமைந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் டிவியில் இருந்த போதே அவருக்கு மெரினா என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார். 20 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளா.ர் தற்போது அவர் மாவீரன், அயலான், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இரண்டுமே 100 கோடி வசுலை அள்ளியிருந்தது. டான் படத்தில் கொரியன் பாஷை போல இதா அக்காவூ அம்ச்சா என்று சிவகார்த்திகேயன் சூரியுடன் இணைந்து ஒரு காமெடி செய்திருப்பார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த காமெடியை ரசித்தனர். மேலும் பலரும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து தங்களின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர்.

குழந்தைகள் மனதில் "நிறவெறி" நஞ்சை விதைத்தாரா சிவா? சிவா பேச்சால் எழுந்த கடும் சர்ச்சை.! 1

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி ஒன்றிற்கு சென்ற சிவகார்த்திகேயன் குழந்தைகளிடம் கொரியர்களின் உருவம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அதில் பேசும்போது அவர் கொரியர்களை பார்த்தால் ஆம்பளை எது? பொம்பளை எது? என்ற வித்தியாசமே தெரியாது என்று குழந்தைகளிடம் உருவக் கேலி செய்து பேசினார். இதை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக செல்லும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் குழந்தைகளின் மனதில் இவ்வாறு தான் நிறவெறி, இனவெறியை விதைப்பதா? என்று பலரும் ட்விட்டரில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்