இந்திய சினிமாவின் டான்-ஐ பாத்துட்டேன்..வீட்டிற்கே அழைத்து பேசிய ரஜினி..எதுக்கு தெரியுமா?

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார். சிவகார்த்திக்கேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம்தான் டான். இந்த படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன்ஸ் உடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருந்தார். மேலும், எஸ்ஜே சூர்யா, ஷிவாங்கி, சூரி, சமுத்திரகனி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். கல்லூரி மாணவனாக சிவா நடிப்பில் அசத்தியிருந்தார்.

இந்திய சினிமாவின் டான்-ஐ பாத்துட்டேன்..வீட்டிற்கே அழைத்து பேசிய ரஜினி..எதுக்கு தெரியுமா? 1

12 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூலை தாண்டியது இந்த படம், மேலும் இது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் கடைசி்அரை மணி நேரத்தில் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்து இருக்கும். சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர்கள், அப்பா இல்லாமல் வளர்ந்தவர்கள் படம் குறித்து பேசும் போது நெகிழ்ந்து பேசினர். சிவகார்த்திகேயன் அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகயேனுக்கு போன் செய்து பேசியிருந்தார். கடைசி 30 நிமிடங்கள் பயங்கரமாக அழுதுவிட்டதாக ரஜினி சிவாவிடம் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. Twitter Original Source From: Sivakarthikeyan

இந்த நிலையில் சிவா இன்று ரஜினி வீட்டிற்கே சென்றுள்ளார். படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினி, இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிவா, இந்திய சினிமாவின் டானுடன் இருக்கிறேன், அவரை சந்தித்து வாழ்த்துக்களும், ஆசிகளும் பெற்றேன், அவருடன் பேசிய அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஞாபகங்கள், நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி தலைவா! என்று பதிவிட்டு இருந்தார்.
ஏற்கனவே போனில் அழைத்துப் பேசி, தற்போது நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி அவர்களின் பெருந்தன்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்