குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.! சிவா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் இன்று தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். லொள்ளு சபாவில் ஆரம்பித்த சந்தானம் என்று திரையில் மிகப்பெரிய காமெடி நடிகராக இருக்கிறார். அதே போல் அது இது எது என்ற நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன், இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதுபோல் பல கலைஞர்களையும் திறமையாளர்களையும் உருவாக்கி வரும் நிகழ்ச்சிகளில் முதன்மையாக உள்ளது விஜய் டிவி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.! சிவா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.! 1

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்றார். பின்னர் மெரினா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தற்போது இவர் சுமார் 22 படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் இவருடன் இணைந்து சங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் குடும்பத்தை பொறுத்தவரை அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஆராதனா. இவர் வாயாடி பெத்த பிள்ளை என்று ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தும் பாடியும் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாகக ஒரு மகன் பிறந்துள்ளார் அவருக்கு தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அழகிய குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் சிவகார்த்திகேயனும் அவரது பிள்ளைகளும்.

தற்போது சிவகார்த்திகேயன் இன்று பொங்கல் திருவிழாவை தனது குடும்பத்தினருடன் தனது வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அப்போது மனைவியும் மகன் மகள் என அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்