பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நந்தினி கேரக்டரை மிகவும் பாராட்டிய ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். கடந்த 30ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வரும் ஒரு படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் வசூல் மூன்று நாட்களில் 200 கோடியை தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இதன் வசூல் 100 கோடியை தாண்டி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க பல நடிகர்களும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. படம் வெளியாவதற்கு முன்பே படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று முன்னணி நடிகர்கள் பலரும் பல தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் நந்தினி கதாபாத்திரத்தை பார்த்து நான் சிலாகித்துப் போய் விட்டேன். எனக்கு புல்லரித்து விட்டது என்று பதிவு செய்து இருக்கிறார். அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவாகி இருந்த இந்த பொன்னியின் செல்வன் கதையில் கற்பனை கதாபாத்திரமாக வருபவர் நந்தினி. பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் காதலியாக இருக்கும் இவர், வீரபாண்டியனை தலையை அறுத்து ஆதித்த கரிகாலர் கொன்ற பின்பு, பழிவாங்குவதற்காக சோழ அரண்மனைக்குள் நுழைவார். அங்கு பெரிய பலவேட்டரையரை மணந்து கொண்டு அவர் எவ்வாறு அரியணையை அடையத் துடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
இந்த சீனை பொன்னியின் செல்வன் படத்தில் மிக நேர்த்தியாக வைத்திருப்பார் மணிரத்னம். சோழதேசத்தின் அரண்மனைக்கு வருகை புரியும் நந்தினி, சோழ தேசத்தின் அரியணையை ஏக்கத்துடன் அதை பார்த்துக் கொண்டிருப்பார். அந்த காட்சியில் ஐஸ்வர்யா ராய் கண்ணாலேயே நடித்து அசத்தியிருப்பார். அந்த காட்சியின் போது வரும் பிஜிஎம் வேற லெவலில் இருக்கும். அந்த காட்சியை பார்த்தபார்த்த போது தனக்கு மெய் சிலிர்த்து விட்டதாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கும், மணிரத்னத்திற்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கின்றார்.