Categories: சினிமா

பிரின்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating – (?/5)

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் சத்யராஜ் உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.வி அனுதீப. இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இந்த திரைப்படம் குறித்த விமர்சனங்களை தற்போது பார்க்கலாம். டாக்டர், டான் என இரண்டு 100 கோடி வசூல் வெற்றி படங்களை கொடுத்தவர் சிவகார்த்திகேயன். இந்த வரிசையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் படம் ஒன்று தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறை. எனவே படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இதன் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி வெற்றி அடைந்திருந்தது. இந்து படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியிருக்கிறது.

பிரின்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating - (?/5) 1

சுதந்திரத்திற்கு பின்னர் சில பிரெஞ்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். அப்படி ஒரு பிரிட்டிஷ் பெண்மணியாக இருக்கும் ஜெசிகா, ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன் அவரை காதலிக்க தொடங்குகிறார். இதை சிவகார்த்திகேயன் தனது அப்பா சத்யராஜிடம் சென்று கூறுகிறார். ஆரம்பத்தில் பிரெஞ்சுக்கார பெண் என்று நினைத்து ஜெசிக்காவிற்கு ஓகே சொல்லும் சத்யராஜ், பின்னர் அவர் பிரிட்டிஷ்காரப் பெண் என்று தெரிந்ததால் மறுப்பு தெரிவிக்கிறார். இதே போல ஹீரோயின் அப்பாவும் சிவகார்த்திகேயனை ஏற்க மறுக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜ் சாதி மதம் இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வாழ்ந்து வருகிறார். ஆனால் சத்யராஜின் தாத்தாவை சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் கொன்றதால் பிரிட்டிஷ் மீது தனக்கு தீராத கோபம் இருக்கிறது என்றும் ஜெசிக்காவை மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சத்யராஜ் கூறுகிறார். இரு குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்திய வாலிபனும் பிரிட்டிஷ் பெண்ணும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்தப் படத்தில் வழக்கம் போல சிவகார்த்திகேயன் தனது எதார்த்தமான நடிப்பாலும், குறும்புத்தனங்களாலும் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். கும்முற டுப்புற என்ற ரிங்டோனுக்கு ஹூரோயினுக்கு விளக்கம் கொடுக்கும் காட்சிகள் ரகளையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் ஓகே சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கிய தனது தந்தையை சிவகார்த்திகேயன் சமாளிக்கும் இடங்களில் எல்லாம் காமெடியால் சிரிப்பலை உண்டாகிறது.

நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் காமெடி என சிவகார்த்திகேயன் பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல நடனத்திலும் அவர் பின்னி எடுத்துள்ளார். உக்ரைன் நடிகை மரியாவும் தனது முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சத்யராஜ் பிரேம்ஜி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வந்த சதீஷ், ப்ராங்க்ஸ்டர் ராகுல், பாரத் என மூவரும் சேர்ந்து செய்யும் லூட்டிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. மேலும் நடிகர் சூரியும் ஆனந்தராஜும் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றனர். தனது முதல் படத்திலேயே கைத்தட்டல்களை பெறுகிறார் தெலுங்கு இயக்குனர் அனுதீப்.

சில இடங்களில் நகைச்சுவை காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. இருப்பினும் படத்தின் விறுவிறுப்பை அது எங்கும் குறைக்கவில்லை. தமனின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் படத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறது. நடனங்களும் பாட்டுகளும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளன. படத்தின் பாசிட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது: சிவகார்த்திகேயனின் காமெடியான நடிப்பு மற்றும் அசர வைக்கும் நடனம். மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோரின் நடிப்பு. திரைக்கதை, டைமிங் காமெடிகள், காதல் காட்சிகளுக்கும் காமெடி காட்சிகளுக்கும் வரும் பின்னணி இசை, பிஜிஎம், தமனின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் படத்தின் பாசிட்டி விஷயங்களாக பார்க்கப்படுகிறது. படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது: சில இடங்களில் நகைச்சுவைகள் வேலை செய்யவில்லை. இரண்டு மணி நேரம் ஜாலியாக குடும்பத்துடன் சென்று தீபாவளியை கொண்டாடும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது. படத்திற்கு தமிழ் கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங்: 3.0/5

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்