Categories: சினிமா

சிவா நடிக்கும் 22வது படத்தின் டீசர் வெளியானது..மாவீரனாக மாறிய சிவா..டீஸர் சும்மா தெறிக்க விடுது

வெளியிட்டது

வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பே ஜோடி நம்பர் 1 இல் பங்கேற்று ஆடி டைட்டிலையும் வென்றுள்ளார். பின்னர் மெரினா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் வெளிவர உள்ளன. டீசர் வீடியோ கீழே உள்ளது.

சிவா நடிக்கும் 22வது படத்தின் டீசர் வெளியானது..மாவீரனாக மாறிய சிவா..டீஸர் சும்மா தெறிக்க விடுது 1

 

தற்போது சிவகார்த்திகேயன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான டைட்டில் அநௌன்ஸ்மென்ட் வெளிவந்துள்ளது. மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிவகார்த்திகேயனின் 22 ஆவது திரைப்படம் ஆகும்.

இயக்குனர் மடோனா அஸ்வின் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற படத்தை இயக்கியிருந்தார். காமெடியாக இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் 22 வது படமான மாவீரன் படத்தை இயக்கியுள்ளார். இதனால் இந்த படமும் காமெடி கலந்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் டீசர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதை நீங்களும் காண…Watch the teaser below..

Youtube Video Code Embed Credits: Shanthi Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்