Categories: சினிமா

லக்குனா இப்படி இருக்கனும்!!கமல் படத்தில் ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்.

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆரம்பித்து இப்போது தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “டான்” படம் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடைபோட்டு வருகிறது.

இவர் அடுத்து அயலான் படத்தை முடித்துள்ளார். அடுத்து நடிகர் கமல் தயாரிப்பில் ராஜ் கமல் தயாரிப்பில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

படத்தில் சிவக்கார்திகேயனுடன் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் எனவே ஏற்கனவே அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்திலிருந்து இப்பொது சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

லக்குனா இப்படி இருக்கனும்!!கமல் படத்தில் ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன். 1

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. சிவா முதல் முறையாக ராணுவ வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்திற்கு “ராணுவ வீரன்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த “ராணுவ வீரன்” என்பது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1981’இல் வெளியான மாபெரும் வெற்றி படத்தின் தலைப்பாகும்.

நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான சிவா கார்த்திகேயன், இப்பொது கமலின் தயாரிப்பில் இப்படி நடிக்கவிருப்பது பெரிய விஷயமே. படம் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்