
சினிமாவிலும் சின்னத்திரையிலும் உள்ள நடிகர் நடிகைகளை பார்த்து சாதாரண மக்கள் பல பெரும் எப்போதும் ஒரு வித குற்றசாட்டை வைத்து கொண்டே இருக்கிறார்கள், “உங்களுக்கு ஈஸியாக காசு வந்துவிடுகிறது” என. ,ஆனால் அவர்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு பின் அந்த பெயருக்கும், புகழுக்கும் ஆள் ஆகுறார்கள் என்பதை மக்கள் பார்க்க தவறி விடுகிறார்கள். எப்போதும் மக்கள் தங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் படி எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் மறந்துவிடுவார்கள். பிறகு வாய்ப்பு கிடைப்பது என்பதெல்லாம் நடக்காத காரியம்.
இது மீடியாவில் உள்ளவர்கள் நன்கு அறிந்து தங்களை தினம் தினம் மக்கள் முன்னிறுத்தி எதாவது ஒரு புது முயற்சியை செய்து கொண்டே இருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு 2 ஆண்டுகளில் மிகவும் சின்னத்திரையில் பிரபலமாகி உள்ளவர் பாடகி சிவாங்கி. விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் முதல் முறை பங்கெடுத்தார். இவருடைய தந்தை மற்றும் தாயார் இருவருமே கலைமாமணி விருது பெற்ற பாடகர்கள் பின்னி கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணகுமார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரையிறுதி சுற்றில் தோற்று வெளியேறினார்.
அப்போது கூட இவருக்கு இந்த அளவிற்கு மக்களிடமே அறிமுகம் கிடைக்கவில்லை. விஜய் டிவி எப்போதும் புது விதமான நிகழ்ச்சிகளால் மக்களை கவரும் முனைப்பில் இருப்பார்கள். அந்த முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியே “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி. சமையல் போட்டியில் நல்ல காமெடியை சேர்த்து மிக பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை துவங்கியது. இதில் கோமாளியாக அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் இருந்து சில போட்டியாளர்களை களம் இறக்கியது. இதில் காமெடி ஆர்டிஸ்டுகளுடன் கோமாளியாக களம் கண்டவர் தான் சிவாங்கி.
இப்பொது அது எங்குள்ளது என சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சின்னத்திரையில் துவங்கி இப்போது சிவாங்கி வெள்ளித்திரையில் மின்ன துவங்கியுள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் அறிமுகமான இவருக்கு வெள்ளித்திரையில் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். சமீபத்தில் நேயர் ஒருவர் அவருடைய ட்விட்டர் தளத்தில் உங்களுக்குலாம் ஒரு கம்பெனிநிலை இன்டர்வியூ அட்டண்ட பண்ணிட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதானு டென்சன் இல்லாத வாழ்க்கை கிடைச்சி இருக்கு சூப்பர். எல்லா மிடில் கிளாஸ் குடும்பமும், சூழ்நிலையிலும் ஒரு நெருக்கத்தோடு தான் சிக்கி கொண்டு இருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்”.
இதனை பார்த்த சிவாங்கி ‘உங்க நிலை புரியுது, ஆனா எங்களுக்கும் நான் பண்ற ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு புடிக்குமா புடிக்காதான்னு ஒரு டென்சன் இருக்கும். உங்களுக்கு பிடித்தால் நான் இங்கு அடுத்தடுத்த வாய்ப்பை பெற முடியும். இந்த வாழ்க்கையும் யார் வாழ்க்கையும் ஈஸி கிடையாது. இதில் பணக்காரன், மிடில் கிளாஸ், ஏழை எல்லாருக்கும் அவரர் வாழ்கை ஒரு போராட்டம் இருக்கும். #ஆர்ட்டிஸ்ட்வாழ்கை’ என்று பதில் அளித்துள்ளார்.’
இதனை பார்த்துள்ள சில ரசிகர்கள், “நம்ப கோமாளி சிவாங்கியா இது, உண்மையில் நீங்க மிகவும் மெச்சூரிட்டியாக பேசியுள்ளீர்கள். உங்களால் நாங்களும் பெருமை அடைகிறோம்” என தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சிவாங்கிக்கு தெரிவித்து வருகிறார்கள்.