நடிகை சினேகா வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. அந்த விழாவிற்காக தற்போது சினேகாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருக்கின்றனர். அந்த அழகிய புகைப்படங்களை சினேகா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் புன்னகை இளவரசியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “இங்கன ஒரு நீலபக்ஷி” என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு வெளியான “என்னவளே” என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார்.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு பட்டாஸ் என்கிற படத்திலும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் என்கிற மலையாள படத்திலும் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் சினேகா.
2009ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற படத்தில் சிநேகாவும் பிரசன்னாவும் இணைந்து நடித்து வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இதை மறுத்த அவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களின் காதலை ஒப்புக்கொண்டிருந்தனர். 2011 ஆம் ஆண்டு சினேகா பிரசன்னாவின் திருமணம் சென்னையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தற்போது சினேகாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் 2015 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு விஹான் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தை ஆத்யந்தா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும் தனது வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தனது வீட்டில் நடக்கும் சரஸ்வதி பூஜை, வரலட்சுமி நோன்பு, நவராத்திரி கொலு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என அனைத்தையும் தனது தோழிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டாடி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தனது சகோதரியின் இல்ல திருமண விழாவில் முழு குடும்பத்துடன் அவர் நேரம் செலவிட்ட ஒரு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. பலரும் சினேகாவின் இந்த அழகான குடும்பத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!