Categories: சினிமா

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சினேகா.! 30 கிலோவை அசால்ட்டா தூக்குறாங்களே.!

வெளியிட்டது

ஜிம்மில் 30 கிலோ எடையை தூக்கி தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சினேகா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரையில் நமக்கு பிடித்தமான ஜோடிகளில் ஒருவர்தான் சினேகா – பிரசன்னா. இத்தனை வருடங்களைக் கடந்தும் செம்ம க்யூட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர்கள் பல வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். பல பார்வையர்களை அள்ளும் இவர்களது வீடியோவிற்கு கீழ் உங்கள் இருவருக்கும் வயதே ஆகாதா? இன்னும் எப்படி இளமையாக இருக்குறீர்கள் என்று கமெண்டுகளை பறக்க விடுவார்கள் சினேகா-பிரசன்னா ரசிகர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சினேகா.! 30 கிலோவை அசால்ட்டா தூக்குறாங்களே.! 1

2009ம் ஆண்டு வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகன் இருக்கிறார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவுக்கு 2020ல் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் சினேகா உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார். இதனால் அவர் சமூக வலைத்தளங்களில் சில காலம் புகைப்படத்தை வெளியிடாமலும் இருந்து வந்தார்.

சில புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் உருவக் கேலி செய்யத் தொடங்கினர். இதனால் கடுப்பான சினேகா ஜிம்மில் வெறியுடன் உடற்பயிற்சிகளை செய்து படு ஸ்லிம்மாக மாறினார். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் சினேகா. தற்போது தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இன்றும் ஜிம்மில் 30 கிலோ எடையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..!  கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்