தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா.இவர் 2002 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலமாக திரையுலத்திற்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு தமிழில் வெளியான “ஆனந்தம்” என்னும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அந்த படத்தில் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்கிற பாடலின் மூலமாக பலரின் மனங்களை கொள்ளையடித்தார். “புன்னகை இளவரசி” என்று அன்போடு அழைக்கப்படும் சினேகா, கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு என பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா. இவர்கள் இருவருமே எவ்வளவு வயதானாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருந்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சினேகாவுக்கும் பிரசன்னாவிற்கும் 2009 ஆம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் இதை பொதுவெளியில் கூறாமல் இருந்து வந்த இவர்கள், 2011 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கும் சினேகா தற்போது சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டாஸ்” என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார் சினேகா.
தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும் நடன நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கெடுத்து வருகிறார் சினேகா. மக்களின் மன்கவர்ந்த ஜோடிகளாக இருக்கும் சினேகா பிரசன்னா தம்பதிகளுக்கு விஹான் என்கிற ஆண் குழந்தையும் ஆதிந்த்யா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா பிரசன்னா தம்பதிகள் தொடர்ந்து தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டும், வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அவர் போட்டோஷூட் நடத்தை அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.