பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியலில் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ ஒன்று கசிந்துள்ளது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் கவிஞர் சினேகனும் அவரது மனைவி கன்னிகாவும் பங்கெடுக்க உள்ள வீடியோவை அவர்களே தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் தொடர் தற்போது மூன்று ஆண்டுகளை கடந்து முடிவடைய இருக்கிறது மருத்துவராக இருக்கிறது. பாரதி தன் மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். வீட்டிலிருந்து வெளியேறிய கண்ணம்மா கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்க்கிறார். தற்போது தன்னுடைய தவறை உணர்ந்த பாரதி கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா.! இதோ வீடியோ.! 1
பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். தன்னுடைய பழைய நினைவுகளை அனைத்தையும் மறந்த பாரதி புதிய மனிதராக மாறி இருக்கிறார். மேலும் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவராகவும் இருக்கிறார். மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்படி பாரதி கண்ணம்மா சூட்டிங் நிறைவடைந்து இருக்கிறது. இந்த இறுதி கட்ட நிகழ்ச்சிக்காக பலரும் கெஸ்ட் ரோலில் சீரியலில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். நேற்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி மற்றும் பிக்பாஸ் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில், தற்போது கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றனர்.

கவிஞர் சினேகனும், கன்னிகாவும் சின்னத்திரையை கலைக்கி வரும் ஜோடிகளில் ஒருவராக இருக்கின்றனர். சிநேகன் பல பாடல்களை எழுதி இருக்கிறார். கன்னிகாவும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பாரதிகண்ணம்மாவின் கல்யாணத்திற்காக கெஸ்ட் ரோலில் நடிக்க அந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வீடியோவை கன்னிகாவே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்..! நீங்களும் அந்த வீடியோவை காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்