Categories: சினிமா

விருமன் படத்துல பாட்டு எழுதுன எனக்கு, ஒரு தகவல் கூட சொல்லல..! கடுப்பான சினேகன்

வெளியிட்டது

மதுரையில் நடைபெற்ற விருமன் இசை வெளியீட்டு விழாவில் தன்னை அழைக்காதது குறித்து சினேகன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட பாடலாசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பவர் கவிஞர் சினேகன். இவர் பல நல்ல பாட்டுகளை கொடுத்திருக்கிறார். உயிரோட்டமாக உள்ளதும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இவர் பல பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் முதன்முறையாக எழுதிய பாடல் பாண்டவர் பூமியில் வரும் தோழா தோழா என்கிற பாடல் தான் இந்த பாடல். இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அதில் இன்றும் பலருக்கும் கண்களில் கண்ணீரை வர வைக்கும் பாடல் ராம் படத்தில் வரும் ‘ஆராரிராரோ நான் இங்கே பாட’ என்ற பாடல் தான். ஆனால் அவர் பாடலாசிரியராக இருந்தபோது பலருக்கும் அவரை வெளியில் தெரியாது.

விருமன் படத்துல பாட்டு எழுதுன எனக்கு, ஒரு தகவல் கூட சொல்லல..! கடுப்பான சினேகன் 1

 

இவரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட பின்னர் தான் ஓ! இந்த பாடல்களை எல்லாம் இவர் தான் எழுதி இருக்கிறாரா? என்று சிநேகனுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இதில் கடுமையான போட்டியை உருவாக்கி வெற்றி பெறும் நிலையில் இருந்தார் சினேகன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். வெளியே வந்த இவர் தான் காதலித்து வந்த காதலி கனிகாவை மணம் முடித்தார். இவர்கள் இருவரும் instagram-ல் மிக ஆக்டிவாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல லட்சம் பின் தொடர்பவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போடும் வீடியோக்களை பல லட்சம் பார்வையாளர்கள் பார்ப்பதும் உண்டு. இந்த நிலையில் சினேகன் பேசிய பேச்சு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த வாரம் கார்த்திக் அதிதி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் படத்தில் நடித்த அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா மற்றும் இயக்குனர் சங்கர், கார்த்தியின் அண்ணனான சூர்யாவும் இதில் பங்கெடுத்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் பாடலாசிரியர் சினேகனை அழைக்கவில்லை. இதை ஒரு மேடையில் பேசிய சினேகன், பாடலாசிரியரான எனக்கு தகவல் கூட கொடுக்கவில்லை, தற்போது பாடலாசிரியர்கள் யாருக்கும் மதிப்பே இல்லை ஒரு சீன் நடித்த அவர்களை கூட மேடையில் ஏற்றி பேச வைக்கிறார்கள். ஆனால் பாடலை எழுதிய எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் வருத்தத்துடன் பேசினார். படத்தில் உள்ள எல்லாருக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், படத்தில் டீ கொடுப்பவர்கள், தட்டு கழுவும் நபர்களுக்கு கூட முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்று சினேகன் பேசினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

Youtube Video Code Embed Credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்