Categories: சினிமா

சூறாவளி போல சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றிய சினேகன் மனைவி கனிகா.! இவங்க தான் வீரத்தமிழச்சி.!

வெளியிட்டது

கவிஞர் சிநேகனின் மனைவி கனிகா தற்போது சிலம்பும் சுற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மிக அசால்டாக அவர் சிலம்பம் சுற்றும் அந்த வீடியோவை பார்த்த பலரும் உண்மையான சிங்கப்பெண் நீங்கள்தான் என்று பாராட்டி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரக் கலைகளில் ஒன்றாக இருக்கும் சிலம்பம் சுற்றுவது அதுவும் ஒரு பெண் சுற்றுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருப்பவர் கவிஞர் சினேகன். தமிழ் திரையுலகிற்கு பல நல்ல பாடல்களை கொடுத்த கவிஞர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாண்டவர் பூமியில் இவர் எழுதிய அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம், தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் ,ஆட்டோகிராப் படத்தில் எழுதிய மனசுக்குள்ளே தாகம் வந்துச்சோ, ஞாபகம் வருதே ஞாபகம் வருதே, பருத்திவீரன் படத்தில் எழுதிய பாடல்கள், ராம் படத்தில் ஆராரிராரோ போன்ற பாடல்கள் சினேகனுக்கு மணிமகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.

சூறாவளி போல சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றிய சினேகன் மனைவி கனிகா.! இவங்க தான் வீரத்தமிழச்சி.! 1
பலருக்கும் இவர் எழுதிய பாடல்கள் பரிட்சியமாக இருந்த போதிலும் சினேகன் யார் என்றே தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் அந்த நிலையை பிக் பாஸ் போக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் கலந்து கொண்டார் சினேகன். அதன் பின்னர் இவர் பெரிதும் அறியப்பட்டவராக மாறிப் போயிருந்தார். அதற்கு முன்பாக சில படங்களில் நடித்திருந்த போதிலும் பிக்பாஸ் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. பிக் பாஸ்க்கு பின்னர் பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சினேகன் தன்னைவிட வயது குறைந்த பெண்ணான கனிகாவை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை கனிதாவை திருமணம் செய்து கொண்டது முதல் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. உங்களைப் பார்ப்பதற்கு கணவன் மனைவி போல இல்லை, அப்பா மகள் போல் இருக்கிறீர்கள் என்று பலரும் ட்ரோல் செய்து வந்தனர் ய. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத கனிகா மற்றும் சினேகன் இருவரும் தொடர்ந்து மகிழ்ச்சியாக பயணித்து வருகின்றனர்.


மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவது, கோயில்களுக்கு செல்வது, டூர் செல்வது மற்றும் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கனிகா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், அதில் தமிழர்களின் பாரம்பரியக் கலையாக இருக்கும் சிலம்பம் சுற்றி அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்