சூரி ட்வின்ஸா? தன்னுடன் ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரரை வெளிக்காட்டிய சூரி

வெளியிட்டது

மம்மூட்டியின் ‘மறுமலர்ச்சி’ படத்தில் பார்வையாளராக நடித்து தமிழ்த் திரைத்துறைக்குள் நுழைந்தவர் சூரி. ஆனால் பட வாய்ப்புகள் வரவில்லை. பின்பு ‘வின்னர்’ போன்ற பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். திருமதி செல்வம், அல்லி ராஜ்யம், புஷ்பாஞ்சலி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சூரி ட்வின்ஸா? தன்னுடன் ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரரை வெளிக்காட்டிய சூரி 1

பின்னர் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானார். அன்று முதல் “பரோட்டா சூரி” என்று அழைக்கப்பட்டார். அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்கும் வாய்புபுகளைப் பெற்றார். தற்போது ரஜினியுடன் முதன்முதலாக இணைந்து “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று அவர் பிறந்தாள் என்பதால் முகநூல் பக்கத்தில் தன் உடன் ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வரும் பதிவில் அவர் கூறியதாவது ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன் என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி என்றும் பதிவு செய்திருந்தார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்