சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘கருடன்’ திரைப்படத்திலிருந்து முதல் சிங்கள் பாடலான “பஞ்சவர்ணக்கிளியே..” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. சினேகன் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவே இந்த பாடலைப் பாடியிருக்கிறார். தமிழில் காமெடி நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்து, தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் சூரி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விடுதலை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது ரசிகர்கள் விடுதலை பாகம் இரண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூரி அடுத்ததாக ஹீரோவாக களமிறங்கி இருக்கும் திரைப்படம் தான் ‘கருடன்’. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து நடிகர்கள் சசிகுமார் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சூரியின் கதாபாத்திரம் ‘சொக்கன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. அதில், “நாயை விட விசுவாசமானவன் இந்த சொக்கன்” என்று சசிகுமார் சூரியை பார்த்து கூறும்படியான வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது படத்தில் இருந்து “பஞ்சவர்ணக்கிளியே..” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை கவிஞர் சினேகன் எழுத, யுவன் சங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India