Categories: சினிமா

வெளிநாட்டில் தயாராகும் சூரியின் படம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முழுக்க வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் தயாராகும் சூரியின் படம்! 1
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி

ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். சமீபத்தில் வெளியான இவரது அசுரன் படம் வெற்றிகரமாக 100வது நாளை எட்டியது.

தற்போது இவர், காமெடியனாக சூரியை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை தனது ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே, விண்ணைத்தாண்டி வருவாயா?, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதையில் இருந்து உருவாக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இதன் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் நடக்க உள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்