Categories: சினிமா

கோவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, குடும்பத்துடன் கோவில் கோவிலாக சுற்றும் சூரி..

வெளியிட்டது

கோவில்கள் பற்றி பேசி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நடிகர் சூரி தற்போது ராமேஸ்வரத்தில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி விருமன் பட பாடல் வெளியீட்டு விழா மதுரையில் மிகபிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்ட சூரி சூர்யாவையும் கார்த்தியையும் புகழ்ந்து பேசினார் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அகரம் அறக்கட்டளை மூலமாக பலருக்கும் கல்வி உதவி வழங்கி வருகின்றனர் இதை மேற்கோள் காட்டு பேசிய சூரி ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட, அன்ன சத்திரங்களை கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது மேல், ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது என்பது சிறந்தது, அது ஜென்மத்திற்கும் நம்மை பற்றி பேசும் என்று கூறியிருந்தார். சூரியின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. சூரிக்கு இந்து அமைப்புகள் பலர் கண்டனங்களை தெரிவித்தனர். சிலர் வரம்பு மீறி சூரியை வசை பாடி வந்தனர்.

கோவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, குடும்பத்துடன் கோவில் கோவிலாக சுற்றும் சூரி.. 1

சூரி சமீபத்தில் மதுரையில் ஒரு உணவகம் ஒன்றை தொடங்கி இருந்தார். அதற்கு அம்மன் உணவகம் என்றும் பெயர் வைத்திருந்தார். இதை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள், நீங்கள் ஹோட்டல் தொடங்குவதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டி இருக்கலாமே? இதே போல் சர்ச்சுக்கு பதிலாக மசூதிக்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டங்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் படங்களை இனிமேல் பார்க்கப் போவதில்லை என்று கடுமையாக விமர்சித்தனர். விமர்சனங்களை தாங்க முடியாத சூரி மற்றொரு மேடையில் தான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை, கோயில் கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை, பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று தான் சொன்னேன், நான் படிக்காதவன் என்பதனால் எனக்கு பள்ளிக்கூடத்தின் மகத்துவம் தெரியும் அதனால்தான் அதைச் சொன்னேன், இந்த கருத்து பலருக்கும் மாறி போய் சேர்ந்து விட்டது என்றும் வருத்தத்துடன் பேசி இருந்தார்.

மேலும் தான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது, நான் எந்த செயலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சியம்மன் பெயரில் தான் தொடங்குவேன். வார்த்தைக்கு வார்த்தை மீனாட்சி அம்மன் என்றுதான் சொல்லுவேன், நான் நடத்தும் ஹோட்டலுக்கு கூட அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று வருத்ததுடன் பேசி இருந்தார் சூரி. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தேசிய கொடியை தரை துடைக்கும் மாப் குச்சியில் கட்டி இருந்ததாக சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் சூரி மன அமைதி வேண்டி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்