Sorry Nelson!! ஒரே நாளில் ஒட்டுமொத்த நெகட்டிவிட்டியையும் பாசிடிவ்வாக மாற்றிய நெல்சன்!! ஆனா போட்டது ஒரே ட்வீட் தான்!!

வெளியிட்டது

 

Sorry Nelson!! ஒரே நாளில் ஒட்டுமொத்த நெகட்டிவிட்டியையும் பாசிடிவ்வாக மாற்றிய நெல்சன்!! ஆனா போட்டது ஒரே ட்வீட் தான்!! 1

நயன்தாரா நடித்த “கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு முன் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் விஜய் டிவியில் பங்கெடுத்த “கலக்கப்போவது யாரு” போன்ற விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்பொது மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள “பிக் பாஸ்” போன்ற நிகழ்ச்சி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தவர்.

சினிமா ஆசை கொண்ட இவரை அனிருத் நயன்தாராவிடம் பரிந்துரை செய்ய உருவான படம் தான் “கோலமாவு கோகிலா”. ஒரு Dark Comedy படமாக உருவாகிய இது மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் தனுக்கு நீண்ட நாள் பரிட்சயமான சிவகார்த்திகேயனுடன் “டாக்டர்” படத்தில் இணைந்தார். எப்போதும் எல்லா படங்களிலும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் நடிகர் சிவாவை அமைதியாக நடிக்க வைத்து ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுத்து, மிக பெரிய வெற்றியை இந்த படத்திலும் பதிவு செய்தார்.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த போதே, மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் சுஐப்ர்ஸ்டார் ரஜினிகாந்துடன் படம் நெல்சன் இயக்க போவதாக செய்திகள் அதிகாரப்பூர்வாமாக வெளியானது. இந்த செய்தி, பீஸ்ட் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகவும் எகிற செய்தது. பீஸ்ட் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்தை ரசிகர்கள் இணையத்தில் சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்தனர். மோசமான திரைக்கதையே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் நெல்சனுக்கு தலைவர் 169 படத்தை இயக்கம் வாய்ப்பு பறிபோயுள்ளது எனவும், ரஜினி படத்தை ட்ராப் செய்துவிட்டார் எனவும் பல்வேறான செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என்பதால், திரைக்கதை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.

ஆனால் இந்த செய்திகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைத்து நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழித்தியுள்ளது. இதையடுத்து, தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக் கறையுடன் கூடிய கத்தி தொங்குவது போல் இடம்பெற்றுள்ள போஸ்டருடன் அதன் தலைப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படம் முழுக்க முழுக்க சிறையில் படமாக்கப்பட்டுள்ளது.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு இயக்குனர் நெல்சனும் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கொஞ்சம் மனம்நொந்து போயுள்ளார்கள். ஏனெனில் பீஸ்ட் படம் வெளியான போது மிக பெரிய நெகட்டிவ் கமெண்ட்ஸ்ஸை எதிர்கொண்டார் நெல்சன். படம் சுமாராக இருந்ததால் நெல்சோனை விஜய் ரசிகர்கள் பலவகையிலும் திட்டி தீர்த்தனர். நிறையவே ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் அவரை குறி வைத்தே இருந்தன. அண்மையில் வெளியான விக்ரம் படம் வெற்றிகூட நெல்சோனை கலாய்க்க ரசிகர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று நெல்சனின் பதிவால் பலரும் நெகிழ்ந்து போய், இவரையா நாம இத்தனை நாளா கலாய்த்து கொண்டிருந்தோம், என சோசியல் மீடியாவில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

முதல் இரண்டு படங்களில் நெல்சனுக்கு மிக உதவிய காமெடி தான் “பீஸ்ட்” படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். அதை கொஞ்சம் பார்த்து சரி செய்து கொண்டு இந்த படத்தில் அவர் களமிறங்கினால் நிச்சயம் வெற்றிவாகை சூடுவர் என எதிர்பார்க்கலாம். நெல்சன் சென்ற படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிப்பாரா? என்பதை கொஞ்சம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்