மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மகள் தற்போது முதன் முறையாக சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்திருக்கிறார். மேலும் அவர் தந்தையின் நினைவாக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இசைத் துறையின் முடி சூடா மன்னனாக இருந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். நட்பு, சோகம், இன்பம் துன்பம், காதல், கண்ணீர், காமம், அழுகை, பிரிவு போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் தன் குரல்வழியே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கடத்தியவர் என்று சொன்னால் அது எஸ்பிபி தான். எம்ஜிஆருக்கு தொடங்கி பின்னர் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு வரை பாடி இருந்தார் எஸ்பிபி. ரஜினி படங்களில் வரும் ஓப்பனிங் சாங் அனைத்துமே எஸ்பிபி இல்லாமல் இருந்ததே இல்லை. அன்று தொடங்கி தான் இறக்கும் வரை பாடிக்கொண்டே இருந்த பெருமை கொண்டவர் பாடு நிலா பாலு. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் எஸ். ஜானகியால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மேடைகளில் பாடும் வாய்ப்பு பெறப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் அதிக பாடல்களை பாடிய இவர் பின்னாளில் ஏ ஆர் ரகுமான், இளையராஜா போன்ற பலரின் இசையில் பாடல்களை பாடி இருக்கிறார். சுமார் 40 ஆயிரம் பாடல்கள் மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலக அளவில் அதிக பாடல்களை பாடியவர் என்று பெருமையை கொண்டிருக்கிறார் எஸ்பிபி. பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற இந்தியாவின் பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு உலகம் எங்கிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்திருந்த போது எஸ்பிபிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இழப்பு தமிழகத்திற்கு மிகப்பெரும் பேரிழப்பாக இருந்தது. இன்று வரை இட்டு நிரப்ப முடியாத அளவிற்கு எஸ்பிபியின் இழப்பு இருக்கிறது. எஸ்பிபியின் கடைசி காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
பாடல்கள் உருவான விதம், பாடல்கள் எவ்வாறு பாடப்படுகிறது, எம்எஸ்வி, இளையராஜா போன்றவர்களுடன் பாடிய அனுபவம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். சூப்பர் சிங்கருக்கும் எஸ்பிபிக்கும் இடையே உள்ள நெருக்கம் அளவிட முடியாதது. இந்த நிலையில் தற்போது எஸ் பி பி யின் மகளை முதல்முறையாக அழைத்து வந்திருக்கின்றனர். இவரது மகன் எஸ்பிபி சரண் ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கிறார். எஸ்பிபியின் சகோதரி எஸ்பி சைலஜாவும் பல படங்களில் பாடியிருக்கிறார். இந்த நிலையில் எஸ்பிபியின் மகள் முதல் முறையாக தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார். எஸ்பிபி சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .மகள் பெயர் பல்லவி. மகன் எஸ்பிபி சரண். தற்போது பல்லவி சூப்பர் சிங்கரில் நடுவராக கலந்து கொண்டு எஸ்.பி.பி நினைவாக ஒரு பாடலையு பாடியிருக்கிறார் அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
Youtube Video Embed Code Credits: Vijay Television