Categories: சினிமா

தடை செய்த உயர்நீதிமன்றம்..! சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த அரசு..! குழப்பத்தில் கங்குவா எதிர்பார்ப்பாளர்கள்..!

வெளியிட்டது

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.இப்படம் நாளை மறுநாள் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு UA சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் மற்றும் 34 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

தடை செய்த உயர்நீதிமன்றம்..! சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த அரசு..! குழப்பத்தில் கங்குவா எதிர்பார்ப்பாளர்கள்..! 1

இந்நிலையில் இப்படத்திற்கு உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிலர் வழக்கு தொடர்ந்த நிலையில், வாங்கிய கடன் ரூ.20 கோடியை திருப்பி செலுத்தும் வரையில்,படத்தை வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது படம் வெளியாகும் நாளை மறுநாள் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

வருகிற நவம்பர் 14ஆம் தேதி காலை 9 மணிக்கு கங்குவா படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது அரசு. இதனால் படம் வெளியாகுமா ஆகாதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்