சமீபத்தில் வலைமை படம் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து கருத்து தெரிவித்ததால் அஜீத் ரசிகர்கள் இவரை வறுத்து எடுத்துவிட்டனர். உண்மையான அஜீத் ரசிகர்களாக இருந்தால் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கண்ணீருடம் பதிவிட்டு இருந்தார் ஸ்ரீநிதி. பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடி வருகிறார் என்று ஸ்ரீநிதியை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். வீடியோ கீழே உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெளியான 7C என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள் தான் ஸ்ரீநிதி. யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். வலிமை சர்ச்சை ஓய்ந்த பிறகு சிம்பு குறித்து ஒரு பதிவிட்டார் ஸ்ரீநிதி. அதில் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், ஒரு நாள் நானும் சிம்புவும் மட்டும்தான் மீதம் இருப்போம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து கமெண்ட்டில் ஒருவர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என்று கேட்க அதற்கு ஸ்ரீநிதி நல்லாதான் இருக்கும், ஆனா எனக்கு இப்ப ஆள் இருக்கே என்று கூறியிருந்தார். Embed Credits: Galatta Tamil
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவரது அம்மாவை எதையோ சொல்லி அழ வைக்கிறார். ஸ்ரீநிதி அம்மா “ஒரு நாள் நீ அம்மா இல்லாமல் கதறுவ” என்று அழுது கொண்டே சாபம் விடுகிறார்” ஆனால் சிரித்துக்கொண்டே இருக்கும் ஸ்ரீநிதி அந்த வீடியோவுக்கு கீழே டிராமா என பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீநிதி மக்கள் என்னை பைத்தியம் என்று கூறுகின்றனர், என்றாலும் பரவாயில்லை என்று பதிவிட்டுள்ளார். பப்ளிசிட்டிக்காக அவர் இந்ந மாதிரி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று கமெண்ட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..