ஸ்ரீநிதியை rehabilitation centreல சேர்க்க போறோமா? உண்மைகளை உடைத்த ஸ்ரீநிதி அம்மா

வெளியிட்டது

வலிமை படம் குறித்து பேசி முதன் முதலில் சர்ச்சையில் சிக்கியவர் ஸ்ரீநிதி. 7C என்ற விஜய் டிவி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தொடர்களில் நடித்து வருகிறார். அவருக்கு நட்சத்திரா மற்றும் சைத்ரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். தற்போது நட்சத்திரா குறித்தும் அவருடன் நிச்சயம் ஆன நபர் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நேற்று லைவ்வில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து ஸ்ரீநிதியின் அம்மா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். வீடியோ கீழே உள்ளது.

ஸ்ரீநிதியை rehabilitation centreல சேர்க்க போறோமா? உண்மைகளை உடைத்த ஸ்ரீநிதி அம்மா 1

அதில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவை தானே டெலிட் செய்துவிட்டதாகவும், ஸ்ரீநிதியின் போனை பிடுங்கி வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் ஸ்ரீநிதியின் தாயார் கூறுகையில், வலிமை படம் குறித்து ஸ்ரீநிதி எதுவுமே தப்பாக கூறவில்லை ஆனால் அவர் எவ்வாறு அசிங்கப்படுத்தப்பட்டார்? அதுவே அவரது மன அழுத்தத்திற்கு ஒரு காரணம், மேலும் நட்சத்திரா குறித்து ஸ்ரீநிதி கூறியது அனைத்தும் உண்மை என்றும் கூறினார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நட்சத்திரா வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது நட்சத்திரா ஸ்ரீநிதி குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார். அதனால் தான் ஸ்ரீநிதி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் அவரது அம்மா கூறியுள்ளார். Youtube Video Code Embed Credits: Galatta

நட்சத்திரா ஸ்ரீநிதியை மனநலம் அல்லது மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடும்படி கூறியுள்ளார். இதனால் தான் ஸ்ரீநிதி மனமுடைந்து அவ்வாறு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை நானே அழித்துவிட்டு போனையும் பிடுங்கி வைத்துவிட்டேன் என்றும் ஸ்ரீநிதி அம்மா கூறியுள்ளார். மேலும் என் மகளை எல்லாரும் பைத்தியம் என்ற ரீதியில் கூறுகிறார்கள் ஆனால் அவளுக்கு ஒன்றுமில்லை அவளை கண்டிப்பாக மீட்டு கொண்டு வந்துவிடுவேன் என்று நா தழுதழுக்க கூறினார். உண்மையில் ஸ்ரீநிதிக்கு மன அழுத்தம் என்றால் அவர் கண்டிப்பாக மீண்டு வர வேண்டும். ஸ்ரீநிதி அம்மா அளித்துள்ள பேட்டியை நீங்களும் காண..Watch the below Video.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்