Categories: உலகம்

இலங்கை அதிபர் நவம்பர் 29 ஆம் தேதி இந்தியா வருகை!!

வெளியிட்டது
இலங்கை அதிபர் நவம்பர் 29 ஆம் தேதி இந்தியா வருகை!! 1

இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்ற கோத்தபயா ராஜபக்சே, வரும், 29ல், இந்தியா வர உள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் புதிய அதிபராக, கோத்தபயா ராஜபக்சே, நேற்று முன் தினம் அதிபராக பதவி ஏற்றார். இவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின், தன், ‘ட்விட்டர் ‘ சமூகவலைதள பக்கத்தில், ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு :

பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு வாழ்த்துகளை நேரில் தெரிவித்தேன். இவரது ஆட்சியில், இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவு, புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.புதிய அதிபரை இந்தியா வருமாறு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த தகவலை, அவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து, வரும், 29ல், இந்தியா வருவதாக, கோத்தபயா தெரிவித்தார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்