“நிறைமாத நிலவே வா வா..” Cute ஆக மெட்டர்னிட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை ஸ்ரீதேவி அசோக்.!

வெளியிட்டது

சின்னத்திரையில் வில்லியாகவும் துணை வேடங்களிலும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். நிறைமாதத்தில் நடிகைகள் செய்யும் போட்டோஷூட்டையும் அவர் நடத்தி இருக்கிறார். சின்னத்திரையில் பல நடிகைகள் துணை வேடங்களில் நடித்து வரும் போதிலும் சில நடிகைகள் மட்டுமே நீடித்து நிற்கின்றர்.

"நிறைமாத நிலவே வா வா.." Cute ஆக மெட்டர்னிட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை ஸ்ரீதேவி அசோக்.! 1

அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’, ‘தங்கம்’ போன்ற பல சன் டிவி தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்.

பின்னர் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற சீரியலின் மூலமாக விஜய் டிவிக்கு வந்த இவர், பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்தார்.

இந்த தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடிகளாக நடித்த ‘ராஜா ராணி’ சீரியலில் ஸ்ரீதேவி வில்லியாக களமிறங்கினார். சிறந்த வில்லத்தனங்களை செய்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார். நடிப்பது மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதால் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

தற்போது ‘மோதலும் காதலும்’ என்கிற விஜய் டிவி சீரியலில் ஹீரோவின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் செய்தியைசமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நிறை மாதத்தில் போட்டோஷூட் நடத்தி அதை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் ஸ்ரீதேவிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்