கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி பூஜை பலராலும் கொண்டாடப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த பூஜையை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீதேவி விஜயகுமாரும் தனது வீட்டில் வரலட்சுமி பூஜையை கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள்தான் மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதிகள். மஞ்சுளா சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் இறந்துவிட விஜயகுமார் தனது மூத்த மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.
விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்கிற மூத்த மனைவி இருக்கிறார். முத்துக் கண்ணுவிற்கு அருண் விஜய், அனிதா கவிதா என்று மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில், மஞ்சுளாவிற்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இதில் விஜயகுமார், அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா ஸ்ரீதேவி என அனைவரும் திரைத்துறையில் இருந்து வருகின்றனர். திரைக் குடும்பமாக விளங்கிவரும் இவர்கள் குடும்பத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவி தனது வீட்டில் வரலட்சுமி பூஜையை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் வீட்டில் வெள்ளி முகத்தில் அலங்கரிக்கப்பட்ட கலசத்துக்கு பூஜை செய்து அவர் இந்த பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். பட்டுப் புடவையில் அவர் எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரலட்சுமி விரதம் கொண்டாடியிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.!