Categories: சினிமா

பாப் இசையில் பாடிய பாடலை விடமுடியாமல் தவிக்கும் ஸ்ருதிஹாசன்!!

வெளியிட்டது
பாப் இசையில் பாடிய பாடலை விடமுடியாமல் தவிக்கும் ஸ்ருதிஹாசன்!! 1

கமலைப் போலவே அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பன்முக திறமையான விஷயங்கள் கொண்டவராய் நடிப்பு தவிர, பின்னணி பாடகி, இசை அமைப்பாளர், டப்பிங் கலைஞர், மேற்கத்திய மேடைப் பாடகி என்று பல துறைகளில் வலம் வருகிறார். தனக்கென ஒரு இசைக் குழுவும் நடத்தி வருகிறார். இதனால் நடிப்பில் மட்டுமே அவரால் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த ஒன்றரை வருடமாக புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்த ஸ்ருதி சமீபத்தில்தான் விஜய்சேது பதியுடன் லாபம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்துள்ளது.

சமீபத்தில் லண்டனுக்கு தனது இசைக்குழுவுடன் சென்ற ஸ்ருதி அங்கு இசை நிகழ்ச்சி நடத்தியதுடன் பாப் பாடகியாக மாறி மேற்கத்திய பாடல்கள் பாடியுள்ளார். அங்கு இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு பிறகு இந்தியா திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து என்று ஒரு சிலர் ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்தாலும் இசையிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ள முடியாமல் நடிப்பும், இசைக்கும் இடையில் தவித்து வருகிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்