விஜய் டிவிக்கு வந்த ஆதி குணசேகரனை பாட்டு போட்டு பங்கம் செய்த DJ பிளாக்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் மாரிமுத்து, ஸ்ரீராமன், சத்திய பிரியா, சுலோச்சனா, மீரா கிருஷ்ணன் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் வித்தியாசமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது ஸ்டார்ம் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். அவர் பிக்பாஸுக்கு சென்றிருந்த சமயத்தில் சில நாட்கள் இந்த நிகழ்ச்சியை மாகபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். பாடல் வரிகளை கண்டுபிடிப்பது, புகைப்படங்களைக் கொண்டு பாடலை கண்டுபிடிப்பது என்று சுவாரசியமாக நகர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவிக்கு வந்த ஆதி குணசேகரனை பாட்டு போட்டு பங்கம் செய்த DJ பிளாக்.! 1

மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. ஒழுங்கா பாடு இல்லனா ஸ்ப்ரே அடிச்சு புடுவேன் போன்ற ரவுண்டுகள் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து தற்போது ஆதி குணசேகரன், அவரது தாயாராக நடிக்கும் சத்யபிரியா ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் சுலோச்சனா, மீரா கிருஷ்ணன், வித்யூலேகாவின் தந்தை ராமன் உள்ளிட்டோரும் விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். இதில் ஒழுங்கா பாடு ஸ்ப்ரே அடிச்சு போடுவேன் என்கிற ரவுண்டில் தற்போது மாரிமுத்து நின்று கொண்டிருக்கிறார்.

அவருக்கு டிஜே பிளாக் எங்கிருந்து வந்தாயோ நீ என்ற கடல் படத்தில் வரும் பாடலை போடுகிறார். அதை பார்த்த குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். பின்னர் பிளாக்கை பார்த்து இந்தாப்பா ஏய்? யாருகிட்ட லந்து பண்ற? என்ன பாட்டு போடுற ஒழுங்கா பாட்டு போடு என்று மிரட்டுகிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்