விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு தற்போது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களாக இருக்கும் மீனா, சங்கவி,,ஸ்ரீதேவி மகேஸ்வரி போன்றவர்கள் வருகை தந்திருக்கின்றனர். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி. பிக்பாஸ், குக் வித் கோமாளி, நீயா நானா, சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், கலக்கப்போவது யாரு போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக். 3 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். இரண்டு அணிகளும் பாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மியூசிக்கை வைத்து பாட்டை கண்டுபிடிப்பது, விடுபட்ட எழுத்தை நிரப்புவதன் மூலம் பாட்டை கண்டுபிடிப்பது, புகைப்பட தொகுப்பை வைத்து பாட்டை கண்டுபிடிப்பது என்று பல சுற்றுகளுடன் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் ரகசிய அறைக்குச் செல்லும் அவர்கள் பெட்டியை எடுத்து வந்து வெளியில் காட்ட வேண்டும். அதில் ஜெயித்த பரிசுத்தொகையை அவர்கள் எடுத்துச் செல்லலாம். இதுதான் இந்த போட்டியின் சுவாரசியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதுவரை சின்னத்திரை நடிகர்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் தற்போது வெள்ளித்திரை நடிகைகளாக இருந்த மீனா, சங்கவி, மகேஸ்வரி, ஸ்ரீதேவி போன்றோர் விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். இதில் மீனா சில பாடல்களை கண்டுபிடித்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television