ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இந்த வாரம் செம்ம Fun இருக்கு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 இன் இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 2 மற்றும் சீசன் 3 யிலிருந்து சந்தோஷ் பிரதாப், ரக்சன், குரேஷி, புகழ், அம்மு அபிராமி பவித்ரா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். பல்வேறு வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னிலை வகித்து வருகிறது விஜய் டிவி. பிக் பாஸ் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், நீயா நானா, சூப்பர் சிங்கர் போன்ற வித்தியாசமான பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுப்பவர்கள் விரைவில் வெள்ளித் திரையில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி நிகழ்ச்சியாக இருந்த லொள்ளு சபாவில் இருந்து சந்தானமும், அது இது எது நிகழ்ச்சியிலிருந்து சிவகார்த்திகேயனும் தற்போது வெள்ளித் திரையில் கலக்கிக்க் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இந்த வாரம் செம்ம Fun இருக்கு.! 1

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்த சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, தர்ஷன், அஸ்வின் போன்ற பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமர், புகழ், நாஞ்சில் விஜயன் தங்கதுரை போன்றவர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலர் இன்று பின்னணி பாடுபவர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இதுபோல பலருக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறது விஜய் டிவி. அப்படி மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கிறது ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சியை 3 சீசன்களாக பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடுவில் பிக்பாஸுக்கு சென்றிருந்தபோது இந்த நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இதையும் பிரியங்காவே தொகுத்து வழங்கி வருகிறார்.


தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குக் வித் கோமாளி சீசன் 2வில் இருந்து பவித்ராவும் சீசன் 3 யில் இருந்து சந்தோஷ் பிரதாப் மற்றும் அம்மு அபிராமி ஆகிய இருவரும் வந்துள்ளனர். மேலும் ரக்சன், புகழ், குரேஷி ஆகிய மூவரும் இணைந்து வந்துள்ளனர்.இதில் பிரியங்கா சீசன் 2 பெஸ்ட்டா சீசன் 3 பெஸ்ட்டா என கேட்க, சின்ன குழந்தைக்கு கூட தெரியும் சீசன் 2 தான் பெஸ்ட் என்று கலாய்க்கிறார் குரேஷி. பின்னர் சீசன் 3 அதைவிட பெஸ்ட் என்று சமாளிக்கிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்