விஜய் டிவியின் டாப் ஹிட் ஷோ.! மீண்டும் வருகிறது.! புதிய ப்ரோமோவுடன் வந்த தகவல் இதோ.!

வெளியிட்டது

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. பகல் மற்றும் மாலை வேலைகளில் பல நாடகங்களை ஒளிபரப்பியும், ‘சூப்பர் சிங்கர்’, ‘பிக்பாஸ்’, ‘குக் வித் கோமாளி’, ‘நீயா நானா’, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பியும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. நடன நிகழ்ச்சிகள், விவாத நிகழ்ச்சி, கேம் ஷோ, காமெடி நிகழ்ச்சிகள், பாட்டு நிகழ்ச்சி என மக்களை மகிழ்விக்கும் இடத்தில் முன்னணி வகித்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் டிவியின் டாப் ஹிட் ஷோ.! மீண்டும் வருகிறது.! புதிய ப்ரோமோவுடன் வந்த தகவல் இதோ.! 1

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த, நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியும் புதுப்பிக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில ‘ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5’ விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா தேஷ்பாண்டே பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி பலருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பாடலின் வரிகளை படங்கள் மூலமாகவும், யோசிக்க வைத்தும் கண்டுபிடிக்க சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

பிரியங்கா செய்யும் சேட்டைகளுக்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதை விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவை வெளியிட்டு உறுதி செய்திருக்கிறது. பலரும் இந்த ஷோக்காக ஆவலாக காத்திருப்பதாக கமெண்ட்களில் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்