காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுப்ரமணியபுரம் பட நடிகை ஸ்வாதி.? தீயாய் பரவும் தகவல்.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் தொடர்ந்து விவாகரத்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது மற்றொரு நடிகையும் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவர் செய்த செயலால் ரசிகர்கள் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர். சசிகுமார், நடிகர் ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான சுப்பிரமணியபுரத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி ரெட்டி. ரஷ்யாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த இவர் முதன்முறையாக தெலுங்கு சினிமா ஒன்றில் அறிமுகமானார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் என்கிற தமிழ் படத்தில் முதல் முறையாக நடித்தார். அதன் பின்னர் கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யச்சன், யாக்கை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுப்ரமணியபுரம் பட நடிகை ஸ்வாதி.? தீயாய் பரவும் தகவல்.! 1

தற்போது கைவசம் மந்த் ஆஃப் மது, இனியட்ஸ் என்கிற இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட சுவாதி தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் கேரளாவை சேர்ந்த பைலட் விகாஸ் வாசு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்ற இந்த திருமணத்தில் சில சினிமா பிரபலங்களை மட்டுமே அழைத்து இருந்தார் சுவாதி. எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்று இருந்தது. நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் தற்போது புயல் ஏற்பட்டுள்ளது. சுவாதி தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் திருமண புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார். இதனால் அவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்று வதந்தி கிளம்பியது.


இது குறித்து பதில் அளித்திருந்த நடிகை சுவாதி தனிப்பட்ட சொந்த வாழ்க்கையையும் திரை வாழ்க்கையும் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன் அதனால் தான் என்னுடைய கணவருடைய புகைப்படங்களையும் திருமண புகைப்படங்களையும் நீக்கி இருந்தேன் என்று விளக்கம் அளித்து அப்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர் சில காலம் சமூக வலைதளங்கள் அனைத்தையும் விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் சுவாதி தனது கணவரை பிரிய இருக்கிறார் என்ற செய்தி பரவி இருக்கிறது. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து சுவாதி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்து விளக்கம் அல்லது விவாகரத்தையோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்