
பிக் பாஸ் சீசன் 4இல் இவர் நடுவில் வந்து 49ஆம் நாள் வெளியேறினர். இதை எல்லாம் விட ரசிகர்களுக்கு இவர் “சுசி லீக்ஸ்” என்ற பெயரின் மூலம் ஞாபகம் இருக்கும். சில ஆண்டுகள் முன் இவரின் ட்விட்டர் பக்கத்தில் “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் சினிமா பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது பெரிய பூதாகரமாக வெடிக்க, அவருடைய ட்விட்டர் தளம் முடக்கப்பட்டது. இவர் அப்போது போலீஸ் அலுவலகத்தில் தன்னுடைய இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டு, இவ்வாறான விஷயங்கள் வெளியாகின இதற்கு பின்னணியில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் தான் கணவர் கார்த்திக் குமார் இருப்பதாக புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த பிரெச்சனையில் இவருடைய திருமண வழுவும் முறிவடைந்தது.
சினிமா துறை நடுக்கும் மறைக்கப்பட்ட விஷயங்கள் என பல்வேறு விஷயங்களை குறித்து பேசி வருகிறார் தமிழ் சினிமா துணை நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதற்கு இவர் மேல் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள் என பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் அண்மையில் பாடகி சுசித்ரா குறித்து பேசியிருந்தார். சுசித்ராவும் இவரை போனில் அழைத்து பயங்கரமாக திட்டி தீர்த்தார்.
Video Courtesy – Shalu’s Media.
இப்பொது இவர் சென்னை காவல் துறை ஆணையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த சில மாதங்கள் முன் தன்னுடைய யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்னைப்பற்றி அவதூறாக பேசி இருக்கிறார்.நான் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் மற்றும் பாலியல் ஆர்வம் உள்ளவர் என என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இது போன்ற குற்றச்சாட்டை இவர் என் மேல் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பி வருகிறார். இதனாலேயே எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.”
“2017 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து நான் புகார் அளித்திருந்தேன். அந்த புகார் தொடர்பான போலீஸ் விசாரணையில் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் உட்பட ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தேன். அதேபோல தற்போது பயில்வான் ரங்கநாதன் பின்னணியிலும் அதே நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.