
சென்னையில் உள்ள ஆவடி என்ற பகுதியில் எலக்ட்ரிக் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இதனையடுத்து, விபத்தில் சிக்கி ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆவடி-பூவிருந்தமல்லி சாலையில் உள்ள திஷ்வா எலக்ட்ரிக் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.