பிபி ஜோடிகள் மேடையில் ஆடிக் கொண்டிருந்த போதே கரு கலைந்தது..சுஜாவுக்கு நடந்த சோகம்.!

வெளியிட்டது

பிக்பாஸ் ஜோடிகளில் நடனமாடி கொண்டிருந்தபோது சுஜா வருணிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ள செய்தியை தற்போது அவரது கணவர் சிவக்குமார் ஒரு பேட்டியின்போது தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சுஜாவருணி. இவ்வாறு பிக்பாஸில் கலந்து கொண்ட போது சினேகனுக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனிடையே இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அங்கிருந்தும் இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இவர் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டு வரும் நடன நிகழ்ச்சியான பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது சுஜாவிற்கு ஒரு மிகப்பெரிய சோகம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்து அவரது கணவர் சிவகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பிபி ஜோடிகள் மேடையில் ஆடிக் கொண்டிருந்த போதே கரு கலைந்தது..சுஜாவுக்கு நடந்த சோகம்.! 1

பிபி ஜோடிகள் நடந்து கொண்டிருந்தபோது சுஜா விற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது. அவருக்கு எப்பொழுதும் வாந்தி, மயக்கம் என இருந்துள்ளது. இதனால் மருத்துவரிடம் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து நடனமாடி வந்துள்ளார் சுஜா. இந்த நிலையில் சுஜா மேடையில் ஒரு நாள் நடனம் ஆடிக் கொண்டிருக்கும்போதே கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் சிறுநீர் கூட கழித்துள்ளார். தொடர்ந்து பரிசோதனை செய்து பாரத்த போது கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கூறியபோது சுஜாவும், அவரது கணவரும் கண்கலங்கி அழுதனர்.

மேலும் இதை நிகழ்ச்சியின் போது கூறினால், அனுதாபம் தேட இவ்வாறு சொல்கிறார்களோ என்று பலரும் நினைத்துவிடுவார்கள் என்று இந்த செய்தியை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டதாக சுஜா கூறினார். சுஜா வருணி மற்றும் சிவக்குமார் இருவரும் அமீர் பாவனியுடன் போட்டி போட்டு முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சரியில்லாத போதும் கூட ஆடியதால் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து இருக்கும் சம்பவம் சுஜாவின் வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்