ராமருக்காக நடிகை சுகன்யா தானே எழுதி, இசையமைத்து, பாடிய “ஜெய் ஸ்ரீராம்” பாடல் வெளியானது.!

வெளியிட்டது

அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக நடிகை சுகன்யா தானே எழுதி, இசையமைத்து, பாடியிருக்கும் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. 1991ம் ஆண்டு ‘புது நெல்லு புது நாத்து’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இதன் பின்னர் ‘சின்ன கவுண்டர்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘வண்டிச்சோலை சின்ராசு’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ என்கிற சீரியலிலும் நடித்திருக்கிறார். ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த சீரியல் சுகன்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமருக்காக நடிகை சுகன்யா தானே எழுதி, இசையமைத்து, பாடிய "ஜெய் ஸ்ரீராம்" பாடல் வெளியானது.! 1
தற்போது டிடி பொதிகையில் ‘சக்தி ஐபிஎஸ்’ என்கிற சீரியலில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைத்துறைக்கு திரும்பி இருக்கும் சுகன்யா, தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்காக தனது பங்களிப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார். “ஜெய் ஸ்ரீ ராம்..” எனத் தொடங்கும் அந்த பாடலை தானே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார். இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி.சத்யா செய்து இருக்கிறார்.


இதுகுறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் கோவில் திறக்கப்பட இருக்கிறது. கோவில் கட்டுமானம் தொடங்கிய போது என் நெற்றியில் நான் வரைந்த ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றது. கோவில் திறப்பு விழாவை ஒட்டி எனது சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை சமர்ப்பிக்க இருக்கிறேன்” என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. எனவே பாடலையும் தற்போது அவர் ஙெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sukanya Studio

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்