அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக நடிகை சுகன்யா செய்துள்ள மிக பெரிய செயல்.! குவியும் பாராட்டுக்கள்

வெளியிட்டது

உத்திரபிரதேசம் அயோத்தியில் வருகிற ஜனவரி 24ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் தற்போது நடிகை சுகன்யா அதற்காக பாடல் ஒன்றை தானே எழுதி, கம்போஸ் செய்து, பாடியும் இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுகன்யா. 1991ம் ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகுக்கு அதிமுகமானார். பின்னர் இவருக்கு ‘சின்ன கவுண்டர்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன்பிறகு ‘வால்டர் வெற்றிவேல்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘வண்டிச்சோலை சின்ராசு’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக நடிகை சுகன்யா செய்துள்ள மிக பெரிய செயல்.! குவியும் பாராட்டுக்கள் 1

கடைசியாக இவர் 2023ம் ஆண்டு ‘தீ யுவன்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். வெள்ளி திரையிலிருந்து 2003ம் ஆண்டு சின்னத்திரைக்கு திரும்பிய அவர் ‘ஆனந்தம்: என்கிற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சுமார் ஏழு ஆண்டுகள் வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தற்போது டிடி பொதிகையில் அவர் ‘சக்தி ஐபிஎஸ்’ என்கிற சீரியலிலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அவர் “ஜெய்ஸ்ரீராம்..” என்கிற பாடலை தானே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார். இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட இருக்கின்றது. இந்தப் பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி சத்யா செய்திருக்கிறார்.

இதன் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோவில் திறக்கப்பட இருக்கிறது. கோவில் கட்டுமானம் தொடங்கிய போது என் நெற்றியில் நான் வரைந்த ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கோவில் திறப்பு விழா நடைபெற இருப்பதால் சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்ப்பிக்க இருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். விரைவில் இந்த பாடல் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அது குறித்த சிறு காணொளி ஒன்றை சுகன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Video 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்