தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் சுந்தர் சி. வாழ்க்கை சக்கரம் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்த சுந்தர் சி, முறைமாமன் என்ற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அருணாச்சலம் , நாம் இருவர் நமக்கிருவார், அன்பே சிவம் , கிரி , லண்டன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சுந்தர் சி. இந்நிலையில் விஜயிடம் ஒரு படத்தின் கதையை சொல்ல, அந்த கதையில் விஜய் சில மாற்ங்கள் செய்ததால் இந்த கூட்டணி அமையாமல் பொய் விட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல விமர்சனங்களுக்கு மத்தியில் வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.
இந்நிலையில் சுந்தர் சி யின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2019 ல் வெளிவந்து தோல்வி அடைந்த திரைப்படம் ஆக்ஷன். இந்த கதையை சுந்தர் சி முதலில் விஜயிடம் தான் கூறியுள்ளார். கதையை கேட்ட விஜய் இந்த கதையில் வரும் ஹீரோ பாகிஸ்தானில் மாட்டுவது போன்ற சீன் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளார். விஜய் சில மாற்றங்களை கூறியதால் சுந்தர் சி இந்த படத்தை விஷாலை வைத்து எடுத்தார் என்று கூறப்படுகிறது. படமும் வெளியாகி படுதோல்வி அடைந்தது.