சுந்தரி சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அனுவுக்கு சுந்தரி தான் கார்த்தியின் முதல் மனைவி என்கிற உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் கோபமான அனு கார்த்தி மீது இனிப்புகளை தூக்கி வீசி எறிந்தும் அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டும் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ஹீரோ கார்த்திக் சுந்தரியை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அந்த உண்மையை மறைத்து அனு என்பவருடன் அவருக்கு திருமணம் முடிந்திருந்தது. சுந்தரி தான் கார்த்திக்கின் முதல் மனைவி என்பதை இத்தனை காலமாக அறியாமல் இருந்த அனுவிற்கு தற்போது அந்த உண்மை தெரிந்திருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சுந்தரியின் வீட்டிற்கு வருகிறார் அனு.
அனைவரிடமும் இனிப்பு எடுத்துக் கொள்ள சொல்லி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கார்த்திக்கின் முகத்தில் இனிப்புகளை வீசி எறிந்து அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் விட்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV