4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வருகிறது.! சோகத்தில் ரசிகர்கள்.!

வெளியிட்டது

சன் டிவியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ள செய்தி, அந்த சீரியல் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பல தொலைக்காட்சிகளில் மெகா தொடர்கள் ஒளிபரப்பாகும் போதும் சன் டிவி தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் “ரோஜா” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக பிரியங்கா நல்கரியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வருகிறது.! சோகத்தில் ரசிகர்கள்.! 1

இந்த சீரியல் தற்போது ஆயிரத்தி இருநூறு எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தில் வரும் கோர்ட் சீனுக்காகவே பலர் விரும்பி பார்பதுண்டு. சீரியலுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு இந்த சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவது உண்டு. படங்களில்தான் லாஜிக் ஓட்டைகள் அதிகமாக இருக்கும், ஆனால் அதற்கும் மிஞ்சி லாஜிக் ஓட்டைகளை நாடகத்தில் புகுத்தி விடுகின்றனர் தற்போதைய நாடக இயக்குனர்கள். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை எடுத்து அப்படியே அந்த சீன்களை வசனம் கூட மாற்றாமல் காப்பியடித்து வருகின்றனர். கதை இல்லையென்றால் நாடகத்தை முடித்துவிட்டு செல்லுங்கள் இப்படி ஜவ்வு போல் இழுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளே குமுறுவதுண்டு.

அது போல் ரோஜா சீரியலில் ஒரு முறை நடு ரோட்டில் அடிபட்டு கிடந்தவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது கடுமையாக கேலி செய்யப்பட்டது. இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸை பறக்க விட்டனர். இப்படியே பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இருந்து ஹீரோ சிபு சூரியன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அவர், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய பயணத்தை தொடங்குவதால் ரோஜா சீரியலை விட்டு விலகுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் அந்த முடிவை கை விட்டார். இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது.

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்