சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று தற்போது நிறைவடைய இருக்கும் செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 700 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கும் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெடுந்தொடர்களுக்கு பெயர் போன ஒரு சீரியல் தான் சன் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மதியம் 12:30க்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஹரிகா சுரேந்தர், சாமிதா, பரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ரேகா சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஹரிகா அஞ்சலி என்கிற கதாபாத்திரத்திலும், சுரேந்தர் ராஜா பரமேஸ்வரன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான ஹரிகா சாது, அஞ்சலி என்கிற கதாபாத்திரத்திலன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். இந்தத் தொடர் முதலில் பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. பின்னர் பிப்ரவரி 221 முதல் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதைப்படி அஞ்சலி தான் ஜமீனின் வாரிசு என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் ராஜாவுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஆக இருக்கிறது. அந்த திருமணம் தான் திருமகள் சீரியலின் கிளைமாக்ஸ் ஆக ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி ப்ரொடக்ஷன்ஸ் திருமகள் சீரியலை இயக்கி வந்த நிலையில், தற்போது இந்த நாடகத்தை முடித்துவிட்டு அதே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வேறு ஒரு புதிய நாடகத்தை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மீனா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியல் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் அதிக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 700 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் முடிய இருப்பதால் தற்போது அந்த சீரியலின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.