எப்போதும் திறமை மிக்கவர்களை கண்டுபிடிப்பதில் விஜய் டிவி தனிரகமே. லொள்ளு சபாவில் இருந்து சந்தானம்,யோகிபாபு, கலக்கப்போவது யாரில் இருந்து சிவகார்த்திகேயன், அருணராஜா காமராஜா, என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். பாலா, புகழ், தீனா, சரத், சிவாங்கி, மிர்ச்சி சரவணன், ரோஷினி ஹரிப்ரியன் என நிறைய நட்சத்திரங்களை இந்த தொலைக்காட்சி உருவாகியுள்ளது. இதனை செய்ய அந்த தொலைக்காட்சிக்கு உதவியது அவரகள் நடித்தி வரும் நிகழ்ச்சிகளே.

கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலிருந்து நிறைய நட்சத்திரங்கள் உருவாகியுள்ளன. இன்று பிரபல பேச்சாளராகவும், எழுதுலாராகவும் இருக்கும் கோபிநாத் கூட விஜயின் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சியின் முலமே தன்னுடைய மேடிட்ட வாழ்க்கையை துவங்கினார். அந்த வகையில் திறமையான பாடகர்களை கண்டு பிடித்து அவர்களை மக்கள்முன் நிறுத்தும் நிகழ்ச்சியாக “சூப்பர் சிங்கர்” உள்ளது. அதிலேயே 2 வேர்ஷன்கள், பெரியவர்களுக்கு சிறியவர்களுக்கு என தனி தனியாக உள்ளது.
இதில் தற்போது நடைபெற்று முடித்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீசனை வெற்றிகரமாக எட்டியுள்ளது. 7 சீசன் வெற்றிகரமாக முடிந்து 8வது சீசனை விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்கள் மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தனர். அண்மையில் விக்ரம் படம் ப்ரோமோஷனிற்காக நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பல குழந்தைகள் பல வாரமாக பங்கெடுத்து வந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெற்றது. வெற்றி பெறுபவர்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எப்போதும் செலிபிரிட்டிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பது போல இந்த வருடம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த சீசன் முதல் இடத்தைகிரிஷாங் பெற்று 60 லட்சம் மதிப்பிலுள்ள வீட்டை தட்டி சென்றுள்ளார். பரிசளித்த பின் பேசிய இசையமைப்பாளர் யுவன் முதல் இடம் பெற்ற கிரிஷாங்கை சினிமாவில் பாட தன்னுடைய படம் ஒன்றில் நிச்சயம் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானா பெற்றார். இவருக்கு 5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை நேஹாவும் பெற்றார். இவருக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.
எப்போதும் இது போன்ற போட்டிகளுக்கு ரசிகர்கள் வாக்கின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டார்கள் என நிகழ்ச்சி சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், மக்களிடம் எப்போதும் வெற்றிபெறுபவர்களை காட்டிலும் மற்றொருவர் வென்றிருக்க வேண்டும் என கோரிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த செயலுக்கு இந்த சீசனும் எந்த வகையிலும் முற்றுப்பெறவில்லை. முதல் இடத்தை கிரிஷாங் வென்று இருந்தாலும், மக்கள் அளித்த வாக்குகளின் படி இரண்டாவதாக வந்த ரிஹானாவே முதலிடத்தில் இருந்தார்.
போட்டி முடித்த நிலையிலும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை இந்த முடிவின் பேரில் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். என்னதான் மக்கள் ஒட்டுபோட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் படி இருந்தாலும், கடைசியில் நீங்கள் முடிவு செய்பவர்களே வெற்றியாளராகளாக முடிவாகிறார்கள், அதற்க்கு என இவ்வாறு மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பது போல தவறாக சித்தரிக்கிறீர்கள் என கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.