பிரம்மாண்டமான பங்களா கட்டிய செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி.! வீட்டின் ஹோம் டூர் வீடியோ

வெளியிட்டது

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் சேர்ந்து தங்களது சொந்த ஊரில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார்கள். அதனுடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடல்களை பட்டி தொட்டி எங்கும் சென்று பரப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நிறைமாத கர்ப்பிணியாக போராட்ட களத்தில் நின்று கொண்டு பாடியதன் மூலமாக ராஜலட்சுமி பெரிதும் அறியப்பட்டார். பின்னர் அவர்கள் இருவருக்கும் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான பங்களா கட்டிய செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி.! வீட்டின் ஹோம் டூர் வீடியோ 1

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் அடைந்திருக்கும் உயரத்தைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். கிராமத்து நாட்டுப்புற கலைஞர்களின் திறமைகள் பற்றியும், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும், நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் டிவியின் மூலமாக பல சமயங்களில் பதிவு செய்தனர். இதனால் பலருக்கும் கிராமத்து நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையின் கஷ்டங்கள் புரிந்தது. பலரும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது, உதவுவது என செய்யத் தொடங்கினர் ய. இந்த நிகழ்ச்சியில் செந்தில் கணேசும் ராஜலட்சுமியும் கணவன் மனைவியாக பங்கேற்ற போதிலும் செந்தில் கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.்பின்னால் இவர்கள் இருவருக்கும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

செந்தில் கணேஷ் காப்பான், சார்லி சாப்ளின் 2, சூரரைப் போற்று போன்ற பல படங்களில் பாடியிருக்கிறார். அதேபோல் ராஜலட்சுமிக்கு திருப்புமுனையாக அமைந்த பாடல் புஷ்பா படத்தில் வரும் வாயா சாமி பாடல் தான். இது மட்டுமில்லாமல் கோவில் திருவிழாக்கள், கச்சேரிகள், அரசியல் மேடைகள் என பலவற்றில் பாடி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். அதன் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது அவர்கள் கட்டியிருக்கும் வீட்டின் ஹோம் டூர் வீடியோ வெளியாகியிருக்கிறது. இது வீடா இல்லை திருமண மண்டபமா என்று கேட்கும் அளவிற்கு மிகப் பிரமாண்டமான வீட்டை இருவரும் கட்டி இருக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: amar media

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்